• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

September 16, 2020 தண்டோரா குழு

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும்10 இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு 2020-21 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் மற்றும் பாதிப்பு அதிகமுள்ள காரணத்தினால் இணையத்தளம் மூலமாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், 10 இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க வசதியாக, இணையத்தளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவேற்று வதற்கான கடைசி தேதி 17-09-20 என்று அறிவிக்கப்பட்டதை, 05-10-20 வரையும், அதேபோல், தரவரிசை பட்டியல் வெளியீடு 29-09-20 என்பதையும், 15-10-20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க