September 15, 2020
தண்டோரா குழு
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் மின் கம்பிகள் உரசி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை நஞ்சுண்டாபுரம் அருகே மேற்கு தேவேந்திர வீதியில் சுமார் 60 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.நேற்று மாலையிலிருந்து பலத்த காற்று வீசிய நிலையில் திடிரென குடியிருப்பில் பகுதி அருகே உள்ள மின்கம்பத்தில் இருந்த மின் கம்பிகள் உராய்வு ஏற்பட்டது.இதனால் குடியிருப்பு வீடுகளுக்கு செல்லும் மின் ஒயரில் தீப்பிடித்து பட்டாசு போல் வெடித்துச்சிதறியது.இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
இதையடுத்து உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனிடையே பொதுமக்களே தீயை அணைத்தனர்.அங்கு வந்த மின் ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, ஒயர்களை சரி செய்தனர்.இதையடுத்து மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.உடனடியாக பொதுமக்களே தீயை அணைத்து, மின் வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளித்ததால் பொரும் விபத்து தவிர்க்கப்பட்டது.