September 14, 2020
தண்டோரா குழு
புற ஊதா கிருமி நாசினி கதிர்வீச்சு தொழில்நுட்ப முறையில் லிப்ட் மற்றும் பல்வேறு இடங்களில் தானியங்கி முறையில் இயங்கும் கிருமி நாசினி சுத்திகரிப்பு இயந்திரத்தை கோவையை சேர்ந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களையும் கிருமி நாசினியை கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் புற ஊதா கிருமி நாசினி கதிர்வீச்சு தொழில்நுட்ப முறையில் சாதாரணமாக பயன்படுத்தும் மொபைல் போன்கள்,பேனா,பணத்தாள்கள்,முக கவசங்கள், உடைகள் என தினந்தோறும் பயன்படுத்தும் அனைத்து விதமான பொருட்களையும் சானிட்டைசிங் செய்யும் விதமான பல்வேறு வகையிலான இயந்திரங்களை வடிவமைத்து உள்ளனர்.மேலும் லிப்ட் போன்ற இடங்களில் இந்த புற ஊதா கிருமி நாசினி இயந்திரங்கள் தானாக இயங்கும் வகையில் உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து லேசர் கிராப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சசி குமார் கூறுகையில்,
500 சதுர அடி அறைமுதல் சிறிய அளவிலான அறைகளையும் இந்த புற ஊதா கதிர்வீச்சு இயந்திரம் வாயிலாக சுத்திகரிக்க இயலும். மக்கள் அதிகம் கூடும் இடங்களான இரயில் நிலையம்,வணிக வளாகங்களில் பயன்படுத்த கூடிய சுத்திகரிப்பு இயந்திரங்களும் தயாரித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சாதாரண மக்களும் எளிதில் பயன்படுத்த கூடிய வகையில் இந்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் FTA ஒழுங்குமுறை, என்.ஏ.பி.எல்.அங்கிகாரம் பெற்ற சோதனை ஆய்வுகள் சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.