September 12, 2020
தண்டோரா குழு
மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.இதற்கிடையில், நீட் தேர்வு பயத்தில் இன்று காலை மதுரையை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில்,நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலைசுற்றிரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த மோதிலால் என்ற மாணவரும் நீட் தேர்வு பயத்தில் தற்போது தற்கொலை செய்து கொண்டார். இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பேர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.