September 12, 2020
தண்டோரா குழு
நாளை நீட் தேர்வு எழுத இருந்த தருமபுரி மாணவர் ஆதித்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், நீட் தேர்வு பயத்தில் இன்று காலை மதுரையை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாளை தேர்வு நடைபெறும் நிலையில்,நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.