• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

September 11, 2020 தண்டோரா குழு

17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை வெள்ளலூர் அடுத்த கோண வாய்க்கால் பாளையம் கருப்பராயன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினரின் 17 வயது மகள்
வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்த நிலையில் சிறுமியை பழைய தாராபுரம் ரோடு, பழனி காந்திபுரத்தை சேர்ந்த விக்னேஷ்(23) என்பவர் கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது.

சிறுமியின் வீட்டுக்கு அருகில் விக்னேஷ் வெல்டிங் வேலை செய்து வந்த போது சிறுமிக்கும் விக்னேஷ் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து திருமண ஆசை வார்த்தை கூறி விக்னேஷ் சிறுமியை பழனிக்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்த தகவலை பழனி போலீஸார் கோவை போத்தனூர் காவல் நிலையத்தில் இளம் ஜோடி ஒருவர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போத்தனூர் போலீஸார் விக்னேஷ் மற்றும் சிறுமியை மீட்டு கோவைக்கு கொண்டு வந்த போலீஸார் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க