• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் சுயசார்பு பாரத் திட்டம் குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு

September 11, 2020 தண்டோரா குழு

மத்திய அரசின் சுயசார்பு பாரத் திட்டம் குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன்
எடுத்துரைத்தார்.

மத்திய அரசின் சுயசார்பு பாரத் திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்று பயன் அடைந்து உள்ளனர். கோவையிலும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த திட்டத்தின் மூலம் கடனுதவி பெற்றுள்ளனர்.அதன் தொடர்ச்சியாக கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் இந்த திட்டத்தினை பற்றி எடுத்துரைத்து அவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பத்தை அளித்தார். அப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தனர்.

நிகழ்வுகளின் போது மக்களிடம் பேசிய வானதி சீனிவாசன்,

சாலையோர வியாபாரிகளில் கடனுதவி வேண்டுமென்போர் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம் என்றும் இது குறித்து சாலையோர வியாபாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஏதாவது குறைகள் இருப்பின் மக்கள் அதை பாஜக நிர்வாகிகளிடம் கூறினால் அதை விரைந்து முடித்து தர பாஜக அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க