September 8, 2020
தண்டோரா குழு
மேற்கு மண்டல காவல்துறையின் 8 மாவட்டங்களில் காவல்துறை தலைவரின் அறிவுறையின் படி காவலர்களின் நலன் கருதும் விதமாக அக்டோபர் 2018 முதல் பிறந்தநாள்
மற்றும் திருமணநாளில் வாழ்த்துக்களுடன் கூடிய விடுமுறையை மாவட்ட காவல்
கண்காணிப்பாளர்கள் மூலமாக வழங்கிட அறிவுரை வழங்கினார்.
அதன்பேரில் மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களான கோயமுத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆளிநர்கள் வரை உள்ள அனைவருக்கும் அவர்களது பிறந்தநாள் மற்றும் திருமண நாளையொட்டி, வாழ்த்துமடலை பிறந்த திருமண நாளுக்கு முந்தைய நாள் விடுப்பு ஆணையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி,பிறந்த, திருமண நாளன்று வான்செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதன்காரணமாக, தொடர்பணியின் இடையில் காவலர்களுக்கு பிறந்தநாள் மற்றும் திருமணநாளின் போது தங்களது குடும்பத்துடன் கொண்டாட, நேரம் செலவிட இயல்கிறது.
பிறந்தநாள் வாழ்த்துமடல்
2018 – ஆம் ஆண்டு முதல் பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் கூடிய விடுமுறை வழங்கிய விவரம் மாவட்ட வாரியாக
கோவை மாவட்டத்தில் 2018 –ல் 1408 நபர்களுக்கும், 2019-ல் 1226 நபர்களுக்கும், 2020 –ல் 1393 நபர்களுக்கும்,ஈரோடு மாவட்டத்தில் 2018 –ல் 143 நபர்களுக்கும், 2019-ல் 1902 நபர்களுக்கும், 2020 –ல் 1511 நபர்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 2018 –ல் 1513 நபர்களுக்கும், 2019-ல் 1527 நபர்களுக்கும்,2020 –ல் 1184 நபர்களுக்கும், நீலகிரி மாவட்டத்தில் 2018 –ல் 123 நபர்களுக்கும், 2019-ல் 659 நபர்களுக்கும், 2020 –ல் 508 நபர்களுக்கும், சேலம் மாவட்டத்தில் 2019-ல் 770 நபர்களுக்கும், 2020 –ல் 703
நபர்களுக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 2018 –ல் 88 நபர்களுக்கும், 2019-ல் 1204
நபர்களுக்கும், 2020 –ல் 1063 நபர்களுக்கும், தருமபுரி மாவட்டத்தில் 2018 –ல் 402 நபர்களுக்கும், 2019-ல் 703 நபர்களுக்கும், 2020 –ல் 603 நபர்களுக்கும், மற்றும் கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் 2018 –ல் 1438 நபர்களுக்கும், 2019-ல் 1462 நபர்களுக்கும், 2020 –ல் 1286
நபர்களுக்கும் வாழ்த்துமடல் வழங்கப்பட்டுள்ளது.
திருமணநாள் வாழ்த்துமடல்
2018 – ஆம் ஆண்டு முதல் திருமணநாள் வாழ்த்துக்களுடன் கூடிய விடுமுறை வழங்கிய விவரம் மாவட்ட வாரியாக கோவை மாவட்டத்தில் 2018 –ல் 756 நபர்களுக்கும், 2019-ல் 678 நபர்களுக்கும், 2020 –ல் 818 நபர்களுக்கும், ஈரோடு மாவட்டத்தில் 2018 –ல் 242 நபர்களுக்கும், 2019-ல் 1622 நபர்களுக்கும், 2020 –ல் 1018 நபர்களுக்கும், திருப்பூர்
மாவட்டத்தில 2018 –ல் 940 நபர்களுக்கும், 2019-ல் 987 நபர்களுக்கும், 2020 –ல் 636
நபர்களுக்கும், நீலகிரி மாவட்டத்தில 2018 –ல் 98 நபர்களுக்கும், 2019-ல் 675 நபர்களுக்கும், 2020 –ல் 254 நபர்களுக்கும், சேலம் மாவட்டத்தில 2019-ல் 663 நபர்களுக்கும், 2020 –ல் 538
நபர்களுக்கும், நாமக்கல் மாவட்டத்தில 2018 –ல் 120 நபர்களுக்கும், 2019-ல் 1120 நபர்களுக்கும், 2020 –ல் 840 நபர்களுக்கும், தருமபுhp மாவட்டத்தில 2018 –ல் 350 நபர்களுக்கும், 2019-ல் 605 நபர்களுக்கும், 2020 –ல் 385 நபர்களுக்கும் மற்றும் கிருஷ்ணகிரி
மாவட்டத்தில 2018 –ல் 678 நபர்களுக்கும், 2019-ல் 740 நபர்களுக்கும், 2020 –ல் 597
நபர்களுக்கும் வாழ்த்துமடல் வழங்கப்பட்டுள்ளது. இது காவலர்கள் மத்தியிலும் காவலர்களின் குடும்பத்தினரிடையேயும் பெரும்
வரவேற்பை பெற்றுள்ளது.
