September 8, 2020
தண்டோரா குழு
முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பாஜகவை பற்றி அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் வசந்தராஜன் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், கோவையை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் பாஜகவை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மூதாட்டியின் வீட்டை ஏமாற்றி கையெக்கப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் ஆறுமுகம் என்பவர் பாஜகவை சார்ந்தவர் இல்லை என்றும், பாஜகவில் இருப்பதால் தான் காவல்துறை கைது செய்யப்படவில்லை என பொய்யாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாகவும்,மேலும் பாஜகவின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருவதாகவும், சிலம்பரசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.