September 5, 2020
தண்டோரா குழு
நீலம்பூர் அருகே கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யபட்ட காளியப்பன் கொலை வழக்கில் அவரது மற்றும் அவரது வீட்டில் வாடகை குடியிருப்பில் வசிப்பவரான ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டவர் காளியப்பன். இவர் அவரது மனைவியிடம் பத்து வருடங்களாக சண்டையிட்டு பேசாமல் இருந்து வந்திருக்கின்றார்.அவரது சொந்த வீட்டில் குடியிருக்கும் பெண்களிடம் அருவருப்பாக பேசுவதுமாக இருந்து வந்துள்ளார்.இதனை பொறுத்துக் கொள்ள முடியாத அவரது மனைவி ராஜாமணி மற்றும் அவர்களது வாடகை குடியிருப்பில் உள்ள ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவரும் காளியப்பனை கொலை செய்யத் திட்டமிட்டு நடைபயிற்சியின் போது கிரிக்கெட் மட்டையால் ஹரி கிருஷ்ணன் தலையில் பலமாக அடித்துள்ளார்.
இதையடுத்து, ஹரி கிருஷ்ணன் மற்றும் காளியப்பனின் மனைவி இராஜமணி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.