• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நாட்டு வெடி குண்டுகளா? – வனத்துறையினர் சோதனை

September 5, 2020 தண்டோரா குழு

அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி கோவை வனக்கோட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கரடியை கொள்வதற்காக பழங்கள், கரியில் வெடிகுண்டு தயாரித்து வைப்பதாக வந்த ரகசிய தகவலின்படிபெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட கட்டஞ்சி மலையை ஒட்டிய கரடிமலை கிராமத்தில் 4 இடங்களில் 6 வீடுகளில் வனத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

உதவி வனப்பாதுகாவலர் செந்தில், தினேஷ் ஆகிய இருவர் தலைமையில் வனவர் உட்பட வனத்துறை அலுவலர்கள் 3 பேர் கொண்ட குழுவினர், காவல்துறையினர் உதவியுடன் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர். வெடிகுண்டுகள் ஏதேனும் பதுங்கி வைக்கப்பட்டு உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது. கரிக்காகவும், பயிர் சேதத்தை தடுப்பதற்காக அவுட்டுக்காயால் யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் கொல்லப்படுகின்றன.வன விலங்குகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,கடந்த வாரம் இந்த அவுட்டுக்காயால் பசுமாடு பாதிக்கப்பட்டது பல்வேறு கேள்வி எழுப்பிய நிலையில், வனத்துறையினர்.இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, வனத்தை ஒட்டிய கிராம மக்களுக்கு இந்த அவுட்டுக்காய் தயாரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள், தயாரிப்பை தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க