• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாடகை தராததால் கடையை சேதப்படுத்திய உரிமையாளர்

September 3, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் இவர் பொள்ளாச்சி மெயின் ரோடு காந்தி நகர் பேருந்து நிறுத்தம் அருகே வாடகைக்கு கடையை எடுத்து பேக்கரி ஒன்றினை நடத்தி வருகிறார்.இவர் அவரது கடைக்கு மாத வாடகையாக 25 ஆயிரம் ரூபாயை கொடுத்து வருகிறார் தற்போது பரவிவரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 4 மாதங்களாக பேக்கரியை திறக்கவில்லை.

இந்நிலையில் அடிக்கடி கடைக்கு வாடகை கேட்டுள்ளார் கடையின் உரிமையாளர் சண்முகசுந்தரராஜ்.இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நாகராஜ் அங்கும் இங்கும் கடன் வாங்கி 38 ஆயிரம் ரூபாயை அளித்துள்ளார் இருப்பினும் மீதி தொகையை கேட்டு சண்முகசுந்தரராஜ் அவரது மனைவி மற்றும் அவரது மகன் விக்னேஷ்பிரபு ஆகியோர் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.அதற்கு இரண்டு மாத காலம் கால அவகாசம் கேட்டுள்ளார் ஆனால் கட்டிட உரிமையாளர் அந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி வேலை செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து கடந்த 29 ஆம் தேதி அன்று இரவு சுமார் எட்டு முப்பது மணி அளவில் நாகராஜ் அவரது மனைவி மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர் ஹரி ஹரன் ஆகியோர் கடையினை தூயமை செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது கட்டிட உரிமையாளர் சண்முகசுந்தரராஜ் அவரது மனைவி மற்றும் அவரது மகன் மேலும் இருவர் கடைக்குள் நுழைந்து கடப்பாரை ஆகிய பொருட்களைக் கொண்டு நாகராஜை தாக்கியுள்ளனர் மேலும் கடையையும் சேதப்படுத்தி யுள்ளனர்.அதுமட்டுமின்றி கடையில் வைத்திருந்த 7,342 ரூபாய் மட்டும் பூர்த்தி செய்யப்படாத காசோலைகளையும் எடுத்துள்ளனர்.இதுகுறித்து போத்தனூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்து அங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது நாகராஜ் காவல்துறையினரிடம் விக்னேஷ்பிரபு எடுத்து வைத்துக் கொண்ட பணம் மற்றும் காசோலைகளை பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார் அதற்கு செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்காக காவல்நிலையம் வரும்படி காவல்துறையினர் கூறியுள்ளனர். செவ்வாய் கிழமை சென்றதற்கு மற்றொரு நாள் வரும்படி கூறி அவர்களை அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட நாகராஜ் மற்றும் அவரது மனைவி கோவை மாநகர காவல் ஆணையரிடம் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கும் படியும் சேதப்படுத்திய பொருள்களுக்கு உரிய தொகையை சண்முகசுந்தரராஜ் அவர்களிடமிருந்து பெற்றுத் தருமாறும் மேலும் எடுத்து வைத்துக்கொண்டுள்ள 7,342 ரூபாய் மட்டும் பூர்த்தி செய்யப்படாத காசோலைகள் ஆகியவற்றை பெற்றுத் தருமாறும் சண்முகசுந்தரராஜ் அவரது மனைவி அவரது மகன் மற்றும் சம்பவத்தன்று ஈடுபட்ட மேலும் இரண்டு நபர்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்துள்ளளர்.

மேலும் படிக்க