• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து அரியர் மாணவர்கள் ஒட்டிய போஸ்டர்

September 2, 2020 தண்டோரா குழு

கோவையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனியார் கல்லூரி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன்பு அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணங்கள் செலுத்தி இருந்தால் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் பேனர்கள் வைக்கப்பட்டன.

கோவையிலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரயில் நிலையம் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் தனியார் கல்லூரியின் சார்பில்(VLB) முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் நன்றிகளை நிலையான வாக்குகளை அள்ளி தருவோம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.அதே போன்று வேறு ஒரு போஸ்டரில் மாணவர்களின் ஒளிவிளக்கே மாணவர்களின் கல்விக் கடவுள் என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அதில் பத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் புகைப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க