• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

த.மு.மு.க.வின் மருத்துவ சேவை அணி சார்பாக இரத்ததான முகாம்

August 31, 2020 தண்டோரா குழு

கொரோனா கால நேரத்தில் கோவையில் அவசர நோயாளிகளுக்கு இரத்த பற்றாக்குறையை போக்கும் விதமாக த.மு.மு.க.வின் மருத்துவ சேவை அணி சார்பாக கோவை அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக, கோவை மாவட்டத்தில் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.. கொரோனா காரணமாக மருத்துவ முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நோயாளிகளுக்கு அவசர தேவைக்கு இரத்தம் கிடைக்கும் வகையில் , கோவை வடக்கு மாவட்டத.மு.மு.க மருத்துவ சேவை அணி, அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பலர் தாமாக முன் வந்து இரத்ததானம் செய்தனர்.

த.மு.மு.க.வின் 25 வது பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியாக நடைபெற்ற இதில், கோவை வடக்கு மாவட்ட தலைவர் அஹமது கபீர், கொரோனா கால நேரத்தில் அவசர நேர சிகிச்சைகளுக்காக இது போன்ற இரத்த தான முகாம்களை நடத்துவதாக தெரிவித்தார். முன்னதாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் பயன்பாட்டிற்கென 152 ஆவது ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.இதில்,தமுமுக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தொண்டரணி மாநில செயலாளர் சர்புதீன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் முகமது ரபி, மற்றும் நிர்வாகிகள் அம்ஜத், ரஜாக், ஆஷிக், சிராஜ்தீன்,மைதீன்,மற்றும் பகுதி,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க