• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாமனாரை கட்டையால் அடித்துக் கொலை – மருமகன் கைது

August 29, 2020 தண்டோரா குழு

கோவை மதுக்கரை மார்க்கெட் வி.ஓ.சி வீதியைச் சேர்ந்தவர் கணேசன் கார்பெண்டராக வேலை செய்து வந்தார். இவரது மருமகன் அரிசிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் இவரும் கணேசனுடன் கார்பெண்டர் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கணேசன் விக்னேஸ்வரனுக்கு சம்பள பாக்கி வைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விக்னேஸ்வரன் அடிக்கடி கணேசன் கேட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் கணேசன் வீட்டிற்கு வந்த விக்னேஸ்வரன் சம்பள பாக்கியை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.இதையடுத்து அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார் இதை தொடர்ந்து படுகாயமடைந்த கணேசனை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கணேசனின் மனைவி குமாரி மதுக்கரை போலீசில் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் மருமகன் விக்னேஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

மேலும் படிக்க