August 28, 2020
தண்டோரா குழு
கோவை அரசு கலைக் கல்லூரியில்இணையவழி கலந்தாய்வு இன்று தொடங்கப்பட்டது.
கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக இணையவழி விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பெறப்பட்டன.இதில் 18 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.அதன் தொடர்ச்சியாகத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, இணையவழி கலந்தாய்வு இன்று தொடங்கப்பட்டது.இணையதளம் வழியாகக் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பில்லாத மாணவர்கள் மட்டும் நேரடியாகப் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்கட்ட கலந்தாய்வு முடிவுற்ற பின்னர் காலியாக உள்ள இடங்களுக்கு ஏற்ப, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படும் என நிர்வாகத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.