August 27, 2020
தண்டோரா குழு
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின்
கலை அறிவியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு இளங்கலை வகுப்புகள் காணொளி மூலம் தொடங்கப்பட்டது.
கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் நவ-இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காணொளி மூலம் இவ் வருடத்திற்கான இளங்கலை படிப்புகள் தொடங்கப் பட்டது.இரு கல்லூரிகளின் மாணவர்களை மற்றும் பெற்றோர்களை ஊக்கப்படுத்த நவ-இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்திய தொடக்க விழாவில் நிர்வாக அறங்காவலர் டி.லக்ஷ்மி நாராயணஸ்வாமி பேசினார்.
அப்போது பேசிய அவர்,
வெற்றியினை நிர்ணயிக்க கல்லூரியை சரியாக பயன்படுத்துங்கள். நல்ல நட்பு வட்டத்தினை ஏற்படுத்தி, குறிக்கோளினை நிர்ணயித்து, விடாமுயற்சியிடன் கடினமாக உழைத்தால் இலக்கினை அடையமுடியும் எனக் கூறினார்.
மேலும் ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி நடத்திய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழாவில் சிறப்பு பேச்சளார் பாரதி பாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியபோது, இன்றைய காலத்தில் இளம் பருவத்தினருக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேற முடியும். ஆசிரியர்களின் நல்ல அறிவுரைகளை சரியாக பயன்படுத்தினால் வாழ்வில் நினைக்கும் குறிக்கோளை அடையமுடியும் எனக் கூறினார்.
இக்காணொளி விழாவில் இக் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டி. லக்ஷ்மிநாராயணஸ்வாமி , முதன்மை நிர்வாக அதிகாரி சி.வி.ராம்குமார் , முதல்வர்கள் முனைவர். பி.எல்.சிவகுமார், முனைவர். கே. சித்ரா, பேராசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.