• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை – மாநகராட்சி

August 26, 2020 தண்டோரா குழு

வணிக வளாகங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யக்கோரி கோவை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றானது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பானது 12 ஆயிரத்தை கடந்து செல்கின்றது. இதுவரைக்கும் 8500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 244 பேர் கொரோனா பாதிப்பில் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வணிக வளாகங்கள்,
தொழிசாலைகள் அதிகம் உள்ள மாவட்டமாக கோவை திகழ்கிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள்,தொழில் கூடங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு நிறுவனங்கள் மூடப்படும் செய்திகள் பரவலாக வருகிறது.

இதனையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், அப்படி முடியாவிட்டால் (pool test) என்று அழைக்கக்கூடிய நூறில் 10பேர் என்ற விதத்திலாவது அந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அரசு விதித்த அறிவுரைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்திலே நோய்த்தொற்றை கட்டுபடுத்த இந்த வழிமுறை பின்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க