• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூத்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 90 வயது மூதாட்டி ஆட்சியரிடம் மனு

August 24, 2020 தண்டோரா குழு

போலி ஆவணம் தயாரித்து பல கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை அபகரித்த மூத்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 90 வயது மூதாட்டி ஆட்சியரிடம் மனு அழுத்துள்ளார்.

கோவை சிவானந்தபுரம் 3 ஆவது வீதியில் வசித்து வருபவர் ராமாத்தாள் (90) . இவரது கணவர் இறந்துவிடவே , இளைய மகன் சின்னராஜ் உடன் வசித்து வருகிறார். இவருக்கு விளாங்குறிச்சியில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு கீழே விழுந்ததில் இடுப்பு பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செல்வை இளைய மகன் சின்னராஜ் கடன் வாங்கி செய்துள்ளதாக தெரிகிறது.தற்போது இடது கால் முறிவிற்கு தனியார் மருத்துவமனைதில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இளையமகன் மட்டுமே கடன் வாங்கி தன்னை கவனித்து வருவதாக ராமத்தாள் தெரிவித்தார்.

மேலும் இவரது மூத்த மகன் மாணிக்கம் நோட்டரி வழக்கறிஞர் மூலம் போலி ஆவணம் தயாரித்து 22 பேரிடம் முன்தொகை வாங்கி, இடத்தை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். மாணிக்கம் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது சொத்தை மீட்டுத்தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மேலும் படிக்க