• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாமக மாநில இளைஞரணி துணை செயலாளர் மீது தாக்குதல்

August 24, 2020 தண்டோரா குழு

மதுக்கடையில் பணம் கேட்டதாக கூறி பாமக மாநில இளைஞரணி துணை செயலாளரை தாக்கிய மதுபான கூட ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

கோவையில் பாமக மாநில இளைஞரணி துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் நேற்று சென்று பத்தாயிரம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.இதனால் கோபமடைந்த மதுபான கூட ஊழியர்கள் அவரின் செல்போனை பிடுங்கி வைத்து கொண்டு அவரை தாக்க முற்பட்டுள்ளனர்.ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்ரீநிதி ஊரடங்கு காலத்தில் மதுக்கடை திறந்து இருப்பதால் அதை கேட்க போனதாகவும் இதனால் ஊழியர்கள் என்னை தாக்கியதாக கூறியுள்ளார்.

துடியலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை திறந்து இருந்ததால் துடியலூர் காவல் நிலையத்தில் சென்று தகவல் தெரிவித்துவிட்டு அதனை நிரூபிக்க டாஸ்மாக் கடை திறந்து இருப்பதை செல்போனில் வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கும்பொழுது மதுபான கூட ஊழியர்கள் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டு தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

அதேசமயம் மதுபான கூட ஊழியர்கள் ஸ்ரீநிதி பத்தாயிரம் ரூபாய் கேட்டதால் தான் அடுத்ததாக தெரிவித்துள்ளனர்.அவரை தாக்கும் வீடியோவிலும் பத்தாயிரம் ரூபாய் கேட்டதாகவும் கேட்கும்போதெல்லாம் தர வேண்டுமா என்று ஒருவர் கேட்டிருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க