August 24, 2020
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் செல்வசிங் என்ற டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பணியாற்றி வரும் 15 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து அந்த கடை மூடி சீல் வைக்கப்பட்டது. கடைக்கு சென்ற மக்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 392 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியில் உள்ள கல்யான் ஜூவல்லர்ஸ் நகை கடை பணியாளர்கள் 58 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.தொடர்ந்து, அந்த கடை மூடி சீல் வைக்கப்பட்டு, அதன் மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சூழலில்,காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் செல்வசிங் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் உள்ள தொழிலாளருக்கு தொற்று உறுதியானது.இதனால் அங்குள்ள மற்ற தொழிலாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அதில் 15 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.தொடர்ந்து அந்த கடை மூடி சீல் வைக்கப்பட்டது.கடைக்கு சென்ற மக்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.