August 22, 2020
தண்டோரா குழு
மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களிடையே தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் கூடாது என மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் படி மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களிடையே தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு எவ்விதத் தடையும் கூடாது. மேலும், பயணத்திற்கென தனி ஒப்புதல், இபாஸ்,போன்றவை கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் நிலையில், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.