• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்த ஏற்ற முக கவசங்கள் அறிமுகம்

August 21, 2020

கோவையை தலைமையிடமாக கொண்ட சென்ட்ராய்டு இன்ஜினியர்ஸ் நிறுவனம் பள்ளி
குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் சென்எக்ஸ் பிராண்ட் முக கவசங்களை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.

கோட்டிங் இல்லாதவை என இரு ரகமாக அறிமுகமாகி உள்ள இந்த முக
கவசங்கள் மீண்டும் மீண்டும் பலமுறை பயன்படுத்தக்கூடியவை. குறிப்பாக இவை பள்ளிக் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவே குறித்து சென்எக்ஸ் முக கவசம் புரோமோட்டர் வெங்கட் கூறியதாவது,

ஸ்வீடன் தொழில்நுட்பத்துடன்
தயாரிக்கப்பட்டு உள்ள இந்த முக கவசங்கள், வைரஸ் தொற்றில் இருந்து 99 சதவீதம் பாதுகாப்பு தரக்கூடியவை ஆகும். சிவப்பு, கருப்பு மற்றும் கிரே என 3 வண்ணங்களில் பெரியது, நடுத்தரம், சிறியது, (கிட்ஸ்) என 3 சைஸ்களில் அறிமுகம் செய்துள்ளோம்.அறிமுக சலுகையாக அதன் தயாரிப்பு செலவின் பாதியை (50 சதவீதம்)விலையாக நிர்ணயித்து இருக்கிறோம்.உயர்ந்த தரத்துடன் கூடிய இந்த முக கவசங்கள் சர்வதேச தரச்சான்றிதழ் பெற்றதாகும். மேலும் சுயஉதவிக் குழுவினருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முக கவசங்களை அவர்களுக்கு அளித்து அவற்றை விற்பனை செய்து பணத்தை செலுத்துமாறு கூற உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க