• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீயணைப்பு துறையினருக்கு ரோட்டரி இன்ட்டஸ்டரியல் சார்பில் சானிடைசர்

August 20, 2020 தண்டோரா குழு

கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு துறையினருக்கு ரோட்டரி இன்ட்டஸ்டரியல் சார்பில் சானிடைசர் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோணா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்றுக்களை தடுப்பதற்கான மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தீயணைப்புத் துறையினரும் வீதி வீதியாக கிருமிநாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க ,கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள மாவட்ட தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் ரோட்டரி இன்ட்டஸ்ட்ரில் சிட்டி கிளப் சார்பில் தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் வீரர்களுக்கு சானிடைசர் கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி ஜெகதீசன் உதவி அதிகாரி தவமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை ரோட்டரி இன்டஸ்ரியல் தலைவர் ராஜசேகர் நிறுவன தலைவர் வக்கீல் பிரபுசங்கர் செயலாளர் பிரபுராம் இயக்குனர் வேல்முருகன் என்ஜினியர் சபி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க