• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்றாவது நாளாக தொடரும் டாஸ்மாக் ஊழியர்களின் தொடர் முழக்கப் போராட்டம்

August 19, 2020 தண்டோரா குழு

மூன்றாவது நாளாக தொடரும் டாஸ்மாக் ஊழியர்களின் தொடர் முழக்கப் போராட்டம்,தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி டாஸ்மாக் ஊழியர் அனைத்து கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.

டாஸ்மார்க் ஊழியர்களின் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த திங்கட்கிழைமை முதல் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகள் முன்பு 9 மணியிலிருந்து 10 மணி வரை அந்தந்த பகுதி ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மார்க் கடை முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் ஒன்றிணைந்து 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய மாநில SC ,ST அரசு ஊழியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் மணிமாறன்,தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தின் மாநில செயலாளர் மதியழகன்,பாட்டாளி மக்கள் கட்சி தொழிற்சங்க மாநில துணை செயலாளர் வேலுமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில்,டாஸ்மாக் ஊழியர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். கேரள மாநிலத்தில் பின்பற்றும் நடைமுறைகள் போல தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும். திடீர் ஆய்வுகளை நிறுத்த வேண்டும். டாஸ்மாக் நேரத்தை காலை 10 மணியிலிருந்து 5 மணி வரை குறைக்க வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பாக தொ.மு.க.மாவட்ட நிர்வாகிகள், மணிகண்டன்,பரமேஸ்வரன் விற்பனையாளர் சங்க சுப்ரமணி,ரமேஷ்பாபு,மோகன் குமார் உட்பட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க