August 18, 2020
தண்டோரா குழு
கோவை இராமநாதபுரம் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த 70 வயதுடைய முதியவரை, போலீசார் போக்சோசட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோவை இராமநாதபுரம், கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்தவர் கனகராஜ். 70 வயதான இவர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று பிற்பகல் அவரது கடைக்கு திண்பண்டம்வாங்க வந்த 10 வயது சிறுமியை கனகராஜ் கடையில் வைத்துபாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.அதிர்ச்சியடைந்த சிறுமி, வீட்டிற்கு சென்று நடந்தவற்றை, அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக, அவர்கள் சம்பவத்தை குறித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் 70 வயதான மளிகை கடை உரிமையாளரை, போலீசார் விசாரணை மேற்கொண்டு,கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல், மனித உயிருக்கு ஊறு விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ், இராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.