August 17, 2020
தண்டோரா குழு
கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தற்காலிகமாக மூடப்பட்டது.
கோவை பி.சி.ஐ.டி அலுவலகத்தில் பணிபுரிந்த இரு சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு கடந்த சனிக்கிழமை கொரொனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். இதனையடுத்து,அங்கு பணிபுரியும் 30 க்கும் மேற்பட்ட சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
இந்நிலையில்,இன்று சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் வாகன ஒட்டுனர் ஒருவருக்கும் தொற்று உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்ட இருவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.இதனையடுத்து தற்காலிகமாக சிபிசிஐடி அலுவலகம் மூடப்பட்டது.
இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு இருந்த சி.பி.சி.ஐ.டிபோலீசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.