August 15, 2020
தண்டோரா குழு
கோவையில் வ.உ.சி மைதானத்தில் நாட்டின் 74 வது சுதந்திர தின விழா சமூக இடைவெளி பின்பற்றி, முக கவசம் அணிந்து கொண்டாட்டப்பட்டது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் இராசமணி தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் இவ்விழாவில் மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா, அரசு மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் ஆகியோர் பங்குபெற்றனர்.
கோவையில் கொரொனா தொற்று தடுப்பு முன் களப்பணியில் சிறப்பாக பணியாற்றிய 90 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது, அதில் சுகாதாரத்துறையில் 28 பேருக்கு, காவல்துறையில் 23 பேருக்கும், வருவாய் துறையை சேர்ந்த 20 பேருக்கும், நகராட்சி நிர்வாகத்தில் 18 பேருக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆட்சியர் கையில் விருதுகளை பெற்றவர்கள், தங்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.