August 14, 2020
தண்டோரா குழு
கோவை ரத்தினசபாபதிபுரம் பகுதியில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அரங்கில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கொரொனா நம்மை விட்டு போகாது. தனியார் மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.இனி ஊரடங்கு, இ-பாஸ் முறை எந்த அளவிற்கு பயனளிக்கும் என தெரியாது என்று தெரிவித்தனர்.தமிழக அரசு வெளியிடும் அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகத்தினர் முறையாகப் பின்பற்றுவதில்லை என இந்திய மெடிக்கல் அசோசியேஷன் சங்கத்தினர் குற்றம்சாற்றினர்.
ஏறக்குறைய 85விழுக்காடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வருகை தரும்பொழுது நோய் தொற்று பரவ காரணமாக இருக்கலாம். அவர்களால் நோய் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது.அவர்களை மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சேர்க்கும் பொழுது அறுவை சிகிச்சை, மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கும் பொழுது அவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என கண்டறிய வேண்டிய நிர்ப்பந்தம் மருத்துவர்களுக்கு உள்ளது.
ஆனால் தனியார் பரிசோதனை மையங்கள் போதிய அளவு கிராம,ஊராட்சி, மற்றும் நகராட்சிகளில் இல்லாத காரணத்தினால் அவர்களை அரசு பரிசோதனை மையங்களுக்கு, அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டு
வருகின்றது.இதனால் அரசுக்கு அதிக பணிசுமை ஏற்படுவதோடு, ரிசல்ட் வருவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது எனவும், மருத்துவ பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டுதல்களும் விலை உயர்ந்தவை என்பதால் அனைத்து நோயாளிகளின் கட்டணத்தில் இவை சேர்ந்து வசூலிக்கபடுகின்றது.பணியாளர்கள் பற்றாக்குறை என்பது ஒரு பெரிய பிரச்சனை எனவும், இந்த நிலையில் மருத்துவமனைகளில் பணிபுரியும் பணியாளர்களை நாங்கள் அதிக செலவுகள் செய்து மருத்துவமனையில் தக்கவைத்துக்கொள்ள, ஊக்கத்தொகை, மற்றும் காப்பீட்டு திட்டங்களை, போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொடுக்க வேண்டி உள்ளதால், இயற்கையாகவே இந்த செலவுகள் நோயாளிகளுக்கு சென்றடைகின்றது.
அரசு நடைமுறையிலுள்ள சாத்தியமில்லாத கட்டணங்களை செயல்படுத்துவதால், முழுமையான சிகிச்சை அளிக்க கடினமாக உள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளை ரெவின்யூ அதிகாரிகள் சரிவர பின்பற்றாமல் ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளி வந்து சென்றால் 14 நாட்கள் அல்லது 20 நாட்கள் என கால நிர்ணயம் இல்லாமல் மருத்துவமனைகளை தற்காலிகமாக மூடி செல்கின்றனர். இது பல்வேறு இடையூறுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதாகவும் தமிழக அரசு விதித்துள்ள முறையான அடக்குமுறைகளை அதிகாரிகள் சரிவரப் பின்பற்ற வேண்டும் என பத்திரிகையாளர் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.