August 14, 2020
தண்டோரா குழு
உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருப்பவர்கள் குறித்த தகவலை பொதுமக்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள் அரசு கூறும்போது,
உரிமம் இல்லாத படைக்கலன்களை (துப்பாக்கி, தோட்டா) சிலர் ரகசியமாக வைத்துக்கொண்டு அவ்வப்போது யானைகள் மற்றும் வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக தகவல் உள்ளது. உரிமம் இல்லாத படைக்கலன்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே உரிமம் இல்லாத படைக்கலன் வைத்திருப்பவர்கள் குறித்த தகவலை பொதுமக்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் (7708100100) -ற்கு தெரிவிக்கலாம். அப்படி தகவல் தெரிவிப்பவர்கள் பற்றிய ரகசியம் காக்கப்படும்.அதேபோல் உரிமம் இல்லாத படைக்கலன் வைத்திருப்பவர்கள் தாமாகவே முன் வந்து ஒப்படைக்க பயமோ தயக்கமோ உள்ளவர்கள் தங்களது படைக்கலன்களை பொதுவான ஒரு இடத்தில் வைத்துவிட்டு கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் (7708100100) -ற்கு அத்தகவலை தாமாகவோ, அல்லது வேறு நபர்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.