August 14, 2020
தண்டோரா குழு
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் கோவையில் கூல் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று கோவில்களில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை கோனியம்மன் கோவில் முன்பு அக்கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் கூல் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் செந்தில்,மாநில இளைஞரணி செயலாளர் சி.டி.கண்ணன் மற்றும்
இந்து மக்கள் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரசன்ன சுவாமிகள்,
மக்களின் மன நிம்மதிக்காக ஆலயங்கள் அனைத்தையும் திறக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆடி மாதத்தில் இந்து கடவுள்களுக்கு கூல் ஊற்ற அரசுக்கு என்ன தயக்கம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.