August 12, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 993 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த எண்ணிக்கை 1,12,059ஆக உயர்ந்தது. இதனால்,தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 119 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,278 ஆக உள்ளது. அதேசமயம் இன்று மட்டும் 5,633பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,56,313 ஆக அதிகரித்தது.தமிழகத்தில் இன்று 71,575 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 34,32,025 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.