August 12, 2020
தண்டோரா குழு
இத்தாலியில் உயிரிழந்த நீலகிரியை சேர்ந்த மருத்துவ மாணவரின் உடலை இந்தியா கொண்டு வர உதவ வேண்டும் பாஜக மாநில துணைத்தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இத்தாலியில் மருத்துவ மாணவராக இருந்த நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த பிரதீக்ஷ் நேற்று மரணமடைந்துள்ளார். இந்நிலையில் அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வர வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் வெளியுறவு துறை இணையமைச்சர் முதரளிதரன் ஆகியோர் உதவவேண்டும் என பாஜக துணை தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், வெளியுறவு துறை இணையமைச்சர் முதளிதரன் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரதீக்ஷ்ஐ இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது உடலை மிக விரைவாக பாரதம் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு இத்தாலியில் உள்ள நமது தூதரகத்தை அறிவுறுத்தியுள்ளேன் எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து, தங்களின் விரைவான பதிலுக்கும்,நடவடிக்கைக்கும் நன்றி என வானதி ஸ்ரீனிவாசன் பதிவிட்டுள்ளார்.