August 10, 2020
தண்டோரா குழு
கோவையில் 12 வயதுடைய பெண் யானை உடல்நலகுறைவால் உயிரிழந்தது.
கோவை அடுத்த போளுவம்பட்டி அருகே கடந்த மூன்று நாட்களுக்கு முன் உடல் மெலிந்து 12 வயதுடைய பெண் யானை இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி வனத்துறையினர் மருத்துவக்குழுவை ஏற்பாடு செய்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இதுவரை 53 குளுகோஸ் பாட்டில்களில் யானைக்கு தேவையான ஆண்டிபயாட்டிக் மற்றும் எனர்ஜி மருந்துகள் கொடுக்கப்பட்டது. யானை காப்பற்ற வனத்துறையினர் தீவிரமாக முயற்சித்து வந்தனர். இந்நிலையில், யானை இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்து.