August 7, 2020
தண்டோரா குழு
கோவையில் தொடரும் டரவுசர் கொள்ளையர்கள் ஒரே நாளில் 4 இடத்தில் கொள்ளையடிக்க
முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் டரவுசர் அணிந்து கொள்ளையர்கள் சுற்றி வருகின்றனர்.இந்நிலையில், கோவை இருகூர் A.G. புதூர் அருகே உள்ள புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் வீட்டின் மதில் சுவர் மேல் ஏறி உள்ளே நுழைந்துள்ளனர்.அப்போது பொதுமக்கள் அருகில் சத்தம் கேட்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்பு சிங்காநல்லூர் பகுதியில் கோத்தாரி நகரில் ஒருவர் ஒருவரது வீட்டில் கதவை உடைக்க முற்பட்டபோது பொதுமக்கள் சத்தம் போட்டதால் அங்கிருந்து தப்பி ஓடி மீண்டும் சிங்காநல்லூர் கதிரவன் கார்டன் அருகில் பகுதியிலுள்ள ஒருவரது வீட்டில் அனைவரும் உள்ள பொழுது கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வர முயன்றுள்ளனர்.அப்போது சத்தம்போட்டதால் பயந்து போன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய மீண்டும் அருகேயுள்ள சுருதி என்கிளேவில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முற்பட்டனர்.வீட்டில் ஏதோ சத்தம் கேட்கவே அவரது மனைவி மகள் உடனே ஓடி வந்த சத்தம்போட்டு பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்தனர்.இதனால் கொள்ளையர்கள் பயந்து ஓடிப் போய் விட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் உள்ள உள்ள மக்கள் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.