August 7, 2020
தண்டோரா குழு
கோவை குறிச்சி பகுதி திமுக சார்பில் கலைஞரின்2ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அணுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய தலைவர்கள் என அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர். இதே போல் கோவை குறிச்சி பகுதி திமுக சார்பில் திமுக பிரதிநிதி நிஷார் ஏற்பாட்டில் முன்னாள் நகரமன்ற தலைவர் குறிச்சி பிரபாகரன், மற்றும் மீனவரணி அமைப்பாளர் காதர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலைஞரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் .தொடர்ந்து கலைஞரின் நினைவுநாளையொட்டி நிஷார்,நாகராஜ் அறக்கட்டளையின் சார்பாக பள்ளியில் படித்து முதல் மதிப்பெண் பெற்ற ஏழை மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் உள்ள 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.