• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை 2020-2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவக்கம்

August 7, 2020 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் இயங்கி வரும் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பத்து(10) இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2020-2021ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கையை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் நீ. குமார் இணையதள வாயிலாக இன்று துவக்கி வைத்தார்.

இளங்கலை பாடப்பிரிவுகளான, இளமறிவியல் (மேதமை) வேளாண்மை,இளமறிவியல்
(மேதமை) தோட்டக்கலை,இளமறிவியல் (மேதமை) வனவியல்,இளமறிவியல் (மேதமை)
உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், இளம் தொழில்நுட்பம் (வேளாண் பொறியியல்), இளமறிவியல் (மேதமை) பட்டுவளர்ப்பு, இளம் தொழில் நுட்பம் (உணவு தொழில் நுட்பம்)இளம் தொழில்நுட்பம் (உயிரித் தொழில்நுட்பம்), இளம் தொழில்நுட்பம்
(ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்) மற்றும் இளமறிவியல் (வேளாண் வணிக
மேலாண்மை) ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கை துவங்கப்பெற்றது.விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்திற்கு தேவையான விபரங்கள் மற்றும் விண்ணப்பக்கட்டணத்தை
www.tnauonline.in என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்.மாணவர் சேர்க்கைகுறித்த இதர விபரங்களை அறிந்துகொள்ள www.tnau.ac.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல் கையேடு உதவிகரமாக இருக்கும் மாணவர்களின் வசதிக்காக பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பிற்கான தகவல் கையேடு இந்த ஆண்டு முதல் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தெளிவு பெற 0422-6611322, 0422-6611328, 0422-6611345, 0422-6611346 ஆகிய தொலைபேசி உதவிச் சேவை எண்களை அனைத்து வேலை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.மேலும், விண்ணப்பதாரர்கள் அரசு கணினி சேவை மையங்களை தொடர்பு
கொண்டும், இணைய தளவாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 17.09.2020 மற்றும் தரவரிசைப்பட்டியல் 29.09.2020 அன்று வெளியிடப்படும் என்று முனைவர் மா.கல்யாணசுந்தரம், முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) தெரிவித்தார்.

மேலும் படிக்க