August 5, 2020
தண்டோரா குழு
மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில், கோவை வ.உ.சி உயிரியியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு, கால்நடை மருத்துவர்கள் இரத்த மாதிரி பரிசோதனை செய்தனர்.
மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை வ.உ.சி உயிரியியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பூங்காவில் உள்ள 15 பறவைகளுக்கு இரத்தம் மாதிரிகள் எடுக்கப்பட்டது.
மேலும் அங்குள்ள பறவைகள் மற்றும் விலங்குகள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளது.