• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராமர் கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் – கோவையில் ஆர்ப்பாட்டம்

August 5, 2020 தண்டோரா குழு

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை பிரதமர் மோடி தலைமையில் 40 கிலோ வெள்ளியிலான செங்கல்லை, கருவறையில் அமைத்து அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இந்த நிலையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்த வேண்டும் என கோவை கரும்புக்கடை பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருப்புச் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். பொருளாதார சீரழிவை கொரோனா என்ற பெயரில் மறைப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொருளாளர் V.M. அபுதாஹிர் கண்டன உரையாற்றினார். இதில் 50க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க