• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராமர் கோயிலுக்காக பல தலைமுறைகள் தியாகங்கள் செய்துள்ளன – மோடி

August 5, 2020 தண்டோரா குழு

ராமர் கோயிலுக்காக பல தலைமுறைகள் தியாகங்கள் செய்துள்ளன என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அயோத்தியில் இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

ஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது; உலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள்! அயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது; பல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்தியாவில் புதிய வரலாறு இன்று எழுதப்பட்டுள்ளது. நமது கலாச்சாரத்தின் சமகால அடையாளமாக ராமர் கோயில் இருக்கும்.நெகழ்ச்சியுடன் மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.
தமிழில் கம்ப ராமாயணம் உள்ளிட்ட பல மொழிகளில் ராமாயணங்கள் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ராமர் கோயிலும் உதாரணமாகத் திகழும்.கடமையே முக்கியம் என கற்பித்தவர் ராமர்; ராமர் அனைவருக்கும் பொதுவானவர்; தாய்லாந்து, கம்போடியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் ராமர் வழிபாடு உள்ளது. கடவுள் ராமரை விட சிறந்த அரசர் யாருமில்லை.கன்னியாகுமரி முதல் க்ஷிர்பவானி வரை, கோடேஷ்வர் முதல் காமக்யா வரை, ஜெகந்நாத் முதல் கேதார்நாத் வரை, சோம்நாத் முதல் காசி விஸ்வநாத் வரை இன்று முழு நாடும் ராமரில் மூழ்கியுள்ளது.

ராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது; இது நடக்கும் என கோடிக்கணக்கான இந்தியர்கள் நினைக்கவில்லை.
சுதந்திரத்திற்கு போராடியது போல், ராமர் கோயிலுக்காக லட்சக்கணக்கானோர் போராடினர்; ராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார்; பிரமாண்டமான கோயிலுக்கு இன்று பூமி பூஜை நடைபெற்றுள்ளது. காந்தியடிகளின் சுதந்திர போராட்டத்திற்கு பின்தங்கிய மக்கள் உதவினர்; ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கும் பின்தங்கிய மக்கள் உதவுகின்றனர்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

மேலும் படிக்க