August 4, 2020
தண்டோரா குழு
மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரூர் வேடப்பட்டி தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால் 5 கிலோ மீட்டர் சுற்றி பொதுமக்கள் செல்கின்றனர்.
கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றலாம் அருவி மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நேற்று இரவு பெய்த கனமழையால் சித்திரை சாவடி தடுப்பணை நிரைந்து நொய்யல் ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. ஏற்கனவே பேரூர் படிதுறை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பேரூர் வேடப்பட்டி சாலையில் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அதன் அருகே தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது.தற்போது நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தற்காலிக சாலை நீரில் மூழ்கியது. இதனால் அவ்வழியாக சென்ற மக்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர்.