August 3, 2020
தண்டோரா குழு
தற்போது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குறைந்து வருவதாகவும், எனவே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு தாய்மார்களிடையே அதிகம் தேவை என ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோவையில் தெரிவித்துள்ளார்.
தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாய்ப்பால் தினம் கொண்டாட ஐக்கிய நாடு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அறிமுகப்படுத்தியது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக இன்னர் வீல் ஆப் கோயமுத்தூர் சார்பாக தாய்ப்பாலின் அவசியம் குறித்த தாய் சேய் ஆரோக்கியம் எனும் குறிப்பேடு வெளியிடப்பட்டது.இன்னர் வீல் கிளப்புடன் இணைந்து ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம்,லேடிஸ் சர்க்கிள்,ரோட்டரி டெக்சிட்டி ஆகி உறுப்பினர்கள் கலந்து கொண்ட இதில் கோவையில் உள்ள பல்வேறு சுகாதார நிலையங்களுக்கு வரும் தாய்மார்களுக்கு ராகி மாவு,ஜவ்வரிசி,சோயா,வேர்க்கடலை,ஹார்லிக்ஸ் உட்பட தாய்ப்பாலை அதிகரிப்பதற்கு என தாய்மார்களுக்கு சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.இன்னர் வீல் கிளப் ஆப் கோயமுத்தூர் கிளப்பின் தலைவர் ஆங்கில கணேஷ் தலைமையில் நடைபெற்ற இதில் இதன் நிர்வாகிகள் பல்குணா பதானிமுன்னால் தலைவர் உஷாராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறித்த வீடியோவை வெளியிட்டு பேசிய மருத்துவர் லட்சுமி சாந்தி தற்போது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குறைந்து வருவதாகவும் எனவே தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வை தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.