August 3, 2020
தண்டோரா குழு
பெரியநாயக்கன்பாளையத்தில் 10ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பெயிண்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் சித்ராதேவி. இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார். 15 வயதான மகள் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.15 வருடங்களுக்கு முன்பே தனது கணவர் இறந்து விட்டதால் விஜய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி சித்ராதேவி உட்பட அனைவரும் வெளியே சென்று இருந்தனர். அவரது மகள் மட்டும் இருந்துள்ளார்.அந்த நேரத்தில் அதேபகுதியை சேர்ந்த 22 வயதான பெயிண்டர் தாஸ் என்பவர் வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த மாணவியிடம் அவரது சகோதரர் அழைத்து வர சொன்னதாக கூறி அந்த மாணவியை பெரியநாயக்கன் பாளையம் ரயில்வே நிலையத்திற்கு அழைத்து சென்று அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.சுதாரித்துக்கொண்ட மாணவி அங்கிருந்து தப்பி ஓடி வீட்டிற்கு வந்து தனது அம்மாவிடம் கூறி அழுதுள்ளார்.
தொடர்ந்து சித்ராதேவி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து தாஸ் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.10 ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக பெயிண்டர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.