• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘திமுக எம்.பி.,க்கள் கேந்திர வித்யாலயா பள்ளி சீட்டுகளை விட்டுக்கொடுக்க தயாரா?’ – வானதி சீனிவாசன் கேள்வி

August 3, 2020 தண்டோரா குழு

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தி.மு.க., எம்.பி.,க்கள் தங்களுக்கு கேந்திர வித்யாலயா பள்ளியில் வழங்கப்பட்டும் 10 சீட்டுகளை விட்டுக்கொடுக்க தயாரா என்று பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவான் கேள்வியெழுப்பியுள்ளார்.

கோவையில் வசிக்கும் வட மாநில மக்களுடன் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடிய வானதி செய்தியாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் கூறியதாவது:

சகோதரத்துவத்தை வலியுறுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது. கொரோனாவால் விழாவை கொண்டாட வாய்ப்பு இல்லாவிட்டலும் ,கோவையில் இருக்கும் வட இந்திய குடும்பங்களுடன் எளிமையான முறையில் இன்று விழா கொண்டாடியுள்ளோம்.தேசிய கல்வி கொள்கையானது கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட பின்னரே அமலுக்கு வந்துள்ளது.இருமொழி கொள்கையை பின்பற்றும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தில் கொடுத்த வாக்குறுதி. ஆனாலும்,கூடுதலாக மொழிகளை கற்பது பலம் தான். கடந்த 10 ஆண்டுகளாக மத்திய கல்விக் கொள்கையான சி.பி.எஸ்.சி கல்வி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூன்றாவது மொழியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றனர். ஆனால், இது நமது அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அறிக்கை விடும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்பிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

திமுக.,இரட்டை வேடம் போடுகிறது. அரசியல் செய்கின்றனர்.வேதங்களை தினிப்பதாக கூறுகின்ரனர்.அது பொய். பா.ஜ.க தீண்டாமைக்கு எதிரான கட்சி. தீணடாமை ஒழிக்கும் ஆக்கப்பூர்வ சக்தி ஆர்.எஸ்.எஸ்.
ஆளும் கட்சியும் மும்மொழி கவ்லிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.மொழி அரசியல் செய்ய வேண்டாம். இதனை அனைத்து கட்சிக்கும் சேர்த்து தான் கூறுகின்றேன்.சி.பி.எஸ்.சி பாட திட்டத்தில் இயங்கும் மத்திய அரசின் கேந்திரவித்யாலயா பள்ளிகளில் எம்.பி.,க்களுக்கு 10 சீட்டுகள் வழங்கப்படுகிறது. மும்மொழிக்கொள்கியக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர் இந்த சீட்டுகளை திருப்பி கொடுக்க தயராக உள்ளனரா? இந்த கல்வீ சீட்டை சிலர் விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர்.

இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

மேலும் படிக்க