August 3, 2020
தண்டோரா குழு
சிறுவாணியில் பெய்யும் தொடா் மழை காரணமாக கோவை குற்றாலத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவை மேற்குத்தொடா்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள சிறுவாணியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாள்களில் 17 மிமீ மழை பெய்துள்ளது. கோவை குற்றாலம் பகுதியில் இரு நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை குற்றாலத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சின்னாறு, பெரியாறு மற்றும் நொய்யல் ஆறு நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்தது.கடந்த ஆண்டு, அக்டோபார் மாதத்தில்,கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதன் பின், தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.