August 1, 2020
தண்டோரா குழு
கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரை அவமரியாதையாக வெளியிட்ட தினமலர் பத்திரிக்கை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவு பழனி அறிவிப்பு என்று தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி பெயரை கொச்சைப்படுத்தி அவமரியாதையாக பழனி அறிவிப்பு என்று வெளியிட்டிருக்கிறது.தமிழக முதல்வர் பெயரை கொச்சைப்படுத்திய தினமலர் பத்திரிக்கை உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். என தமிழ்நாடு முழுவதும் தினமலர் பத்திரிக்கைகளை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்தும் என அறிவித்திருந்தது.இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகம் அலுவலகம் முன்பு பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் தினமலர் பத்திரிகை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.