July 31, 2020
தண்டோரா குழு
ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் ஆவின் அதிநவீன பாலகத்திற்கான கட்டுமான பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆவின் அதிநவீன பாலகத்திற்கான கட்டுமான பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து சுந்தராபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆவின் தெற்கு மண்டல அலுவலகத்தையும் காணொலிக்காட்சி மூலம் துவக்கி வைத்தார். மேலும்,பூத் ஏஜென சிகளுக்கான ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதியினையும் காணொலிக்காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோவை ஆவின் தலைவர் கே.பி.ராஜூ,ஆவின் பொது மேலாளர் ரவிக்குமார் ,உதவி பொது மேலாளர் சுஜித் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.