July 31, 2020
தண்டோரா குழு
கோவையில் ஆஹா செம கல்யாணம் என இலவச முக கவசங்களை வழங்கி அரசு விதிமுறைகளுடன் இருபத்தைந்தாயிரம் செலவில் திருமணங்களை நடத்தி அனைவரையும் வியக்க வைத்து வரும் இளைஞர்.
கோவையைசேர்ந்தவர் ஆனந்த்குமார். பல்வேறு விதமான தனியார் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ஈவென்ட்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.பல்வேறு தொழில் துறையினர் தற்போதைய காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வரும் நிலையில் தற்போதைய கொரோனா கால ஊரடங்கு தமக்கு சாதகமாக இவர் பயன்படுத்தி செலவு குறைவாக திருமண நிகழ்ச்சிகளை நடத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தற்போதைய காலகட்டத்தில் திருமண நிகழ்ச்சிகளை நடத்த நடுத்தர மக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் பெறும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் செலவுகளை குறைத்து வெறும் இருபத்தைந்தாயிரம் ரூபாய் செலவில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் முக கவசங்களை வழங்கி அரசு விதிமுறைகளுடன் திருமணங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இவரது இந்த நூதன முயற்சி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.