July 31, 2020
தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் 8.30 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.பிளஸ் 1 தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 94.38 சதவீதமும், மாணவிகள் 97.49 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய பாடங்களின் தேர்ச்சி விகிதம்
*இயற்பியல் – 96.68 சதவீதம், வேதியியல் – 99.95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
*உயிரியல் – 97.64 சதவீதம், கணிதம் – 98.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
*தாவரவியல் – 93.78 சதவீதம், விலங்கியல் – 94.53 சதவீதம் பேர் தேர்ச்சி
*கணினி அறிவியல் – 99.25 சதவீதம்,
வணிகவியல் – 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி
*கணக்குப் பதிவியியல் – 98.16 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி
அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கோவை முதலிடம் – 98.10 %; விருதுநகர் 2வது இடம் – 97.90 %; கரூர் 3வது இடம் – 97.51 %