July 29, 2020
தண்டோரா குழு
தமிழகத்தில் பொது முடக்கத்தை நீட்டிப்பதா? இல்லையா? பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் உரையாற்றிய முதல்வர் பழனிச்சாமி,
அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா தொற்றும், இறப்பு விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா பரவலை கடுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.காய்ச்சல் முகாம்களால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 1196 நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.தமிழகம் முழுவதும் 110க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன.சென்னையில் மட்டும் 70 நடமாடும் மருத்துவமனையின் மூலம் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 63ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
தொழில்நிறுவனங்கள் சிக்கலின்றி செயல்பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சுமார் 57ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றன.
நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா முகக்கவசம், மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் முதற்கட்டமாக வழங்கப்பட்டிருக்கிறது.மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தாலே மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்ப முடியும்.அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.